1977 ஆண்டு முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஆவார். ௧௯௭௭ ஆண்டிலிருந்து 9 முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளான வருவாய் துறை, வேளாண்மை துறை,, வனத்துறை, போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
மேலும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்த நிலையில், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டபின், தொடர்ந்து கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு:
அதன்பிறகு சிலநாட்கள் அமைதியாக இருந்துவந்த கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது, இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகம் சென்று, விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைய இருக்கிறார்.
- Log in to post comments
