அதிமுக முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. மற்றும் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளருமான சத்தியபாமா இன்று தவெகவில் இணைந்துள்ளார்.
செங்கோட்டையன் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்து இருந்தார். உடனே செங்கோட்டையன் ஆதரவாளரான சத்யபாமாவின் பதவியும் பறிக்கப்பட்டது. 2001ல் கோபிச்செட்டியாளையம் நகர் மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார் சத்தியபாமா. நகர்மன்றத் துணை தலைவர் பதவியும் வகித்தார், பின் 2007-ல் மாவட்ட மகளிர் அணியினுடைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார் ஜெயலலிதா. 2011ல் ஒன்றிய குழு உறுப்பினராகவும், கோபி ஒன்றிய சேர்மனாகவும் செயல்பட்டார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவை தொகுதியில் நிற்க ஜெயலலிதா சத்யபாமாவிற்கு சீட் கொடுத்தார். அப்போது 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சத்தியபாமா. அதிமுகவில் தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்புகளையும் வகித்து வந்தார் சத்தியபாமா.
- Log in to post comments
