சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண் வேண்டி தவெக வெற்றிக்காக வழிபாடு

சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண் வேண்டி வழிபாடு

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண் வேண்டி வழிபாடு செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில் மெக்காவில் புனித ஸ்தலத்தில் தமிழ் மொழியில் அந்த பெண் பேசுகிறார்.அவர், ‛‛உங்களிடம் பாதுகாவல் தேடுகிறோம் கேட்கிறோம் இறைவா. எங்கள் நாட்டை இருளில் இருந்து ஒளியின் பக்கம் திருப்புவாயாக இறைவா. நாங்கள் இம்மையிலும் நல்வாழ்வு கேட்கிறோம் இறைவா. எங்களை படைத்து பரிபாலிப்பவனே.. எங்களை சாங்கியோடு வாழ செய்வாயாக இறைவா..

இம்மையில் சிறந்த ஆட்சியாளனை தந்தருள்வாயாக இறைவா. இறைவா.. ஒரு கோடி கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் விஜய் என்ற தவெக ஆட்சிக்கு வர வேண்டும். அதன் தலைவர் ஆட்சியாளனாக வரவேண்டும். அப்போது தமிழ்நாடு அமைதி பூங்காவாய் ஆகும் என்று முழு நம்பிக்கையோடு இருக்கின்றனர் இறைவா. என்னுடைய எண்ணமும் அதுவே இறைவா.

என்னுடைய அல்லா உன்னுடைய புண்ணிய பூமியில் உனக்கு மிக அருகே நின்று துவா செய்கிறேன் இறைவா.. இந்த பயணத்தை தவெக சொந்தங்களுக்கு சுலபமாக்குவாயாக இறைவா.. 

இதில் கஷ்டங்கள், தீய செயல்கள் ஏற்படுவதை விட்டு.. ஒவ்வொரு மக்களையும், அவர்களின் பொருட்களையும் பாதுகாத்து அருள்வாய் இறைவா.. உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம் இறைவா.. யா அல்லா உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம் இறைவா..

இம்மையில் சிறந்த ஆட்சியாளனை தந்தருள்வாயாக இறைவா. இறைவா.. ஒரு கோடி கணக்கான மக்கள் எங்கள் நாட்டில் விஜய் என்ற தவெக ஆட்சிக்கு வர வேண்டும். அதன் தலைவர் ஆட்சியாளனாக வரவேண்டும். அப்போது தமிழ்நாடு அமைதி பூங்காவாய் ஆகும் என்று முழு நம்பிக்கையோடு இருக்கின்றனர் இறைவா. என்னுடைய எண்ணமும் அதுவே இறைவா.

உனது அருளால் தவெக தலைவர் விஜய், கழக தொண்டர்கள், தோழர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், விர்ச்சுவல் வாரியர்ஸ் என அனைவருக்கும் நீ பாதுகாப்பு அளித்திடுவதாக இறைவா.. அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த பயணம் 100 சதவீதம் வெற்றியடைய வேண்டும் என்று உன்னிடம் மன்றாடி கேட்கிறோம் இறைவா.. என்னுடைய அல்லாவே..வருகிற 2026ல் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உதவிபுரிவாயாக வேண்டும் இறைவா.. இந்த வெற்றி தனிப்பட்ட நபரின் வெற்றியாக மட்டுமின்றி இந்த நாட்டுக்கே கிடைத்த வெற்றியாக இருக்கும் என்னுடைய அல்லாவே.. 

என்னுடைய விருப்பம் இதுதான் இறைவா. நியாயமாக இருந்தால் நிறைவேற்றி கொடு இறைவா.. நிறைவேற்றி தருவாய் என்ற முழு நம்பிக்கையில் இங்கிருந்து புறப்படுகிறேன் இறைவா.. ஆமேன்.. ஆமேன்..'' என்று வேண்டி கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.