எனக்கு ஒரு புது நண்பர் ஒருவர் கிடைத்திருக்கிறார். யார் தெரியுமா? தெரியாதா?
முதல்வர் அவர்கள்தான்.
இப்போது ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, "எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை...
அவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான்" என்று சொன்னார்களே. அப்படி நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால், ஏன் ஐயா கரூர் விஷயத்தில் என் மேல் பழியைத் தூக்கிப் போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படிப் பேசியிருப்பீர்களா? அப்படி நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால், ஒரு ஈவென்ட் (Event) நடத்துவதற்கு ஒரு இடமோ அல்லது ஒரு பெர்மிஷனோ (Permission) ஏன் கொடுக்க மாட்டோம் என்று பழிவாங்கி வருகிறீர்கள்? எல்லாவற்றையும் நீங்களே செய்து கொண்டிருக்கப் போவதில்லை. அப்படியே பொய்களை அவிழ்த்து விடுகிறீர்கள். உங்களுடைய உண்மையான நண்பர்கள் யார் தெரியுமா?
லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம்... இவை எல்லாம் தான் உங்களது உண்மையான நண்பர்கள்.
பர்சனலா (Personally) நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் சார்.
நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை, அது அவசியமும் இல்லை. ஆனால் உங்கள் ஆட்சி தான் தப்பான ஆட்சி.தமிழ்நாட்டு குத் தேவை இல்லாத ஆட்சி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கற்பனையாக ஒரு விஷயம் சொன்னேன். "இந்த முதல்வர் கூட 'விசில்' சின்னத்திற்குத் தான் வாக்களிப்பார்" அப்படின்னு கற்பனையா ஒன்னு சொன்னேன்.
ஆனால் இன்னைக்கு நிஜமாவே நமக்கு ஆதரவாக ஒரு கோஷத்தை எழுப்பியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? "எங்க வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி!" அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? எங்க வாக்குச்சாவடி 'விஜயீ' (வெற்றி) வாக்குச்சாவடி என்று அர்த்தம். அது சரி, மக்களோட இந்த ஆதரவைப் பார்த்துவிட்டு, அவர் அறியாமலே இப்படிப் பேசிட்டாரோ என்னவோ தெரியவில்லை.
50 வருஷ Experience அரசியலில்... உண்மை என்னவென்று ஒப்புக்கொண்டு தானே ஆகவேண்டும்!
