கோபிசெட்டிபாளையம் வந்த மாநில தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு பொதுமக்கள், ஆதரவாளர்கள் மற்றும் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மத்தியில் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முதலில் நான் கண்ட தலைவர் நம் இதயங்களில் குடிகொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மூன்று முறை தமிழ்நாட்டில் நிரந்தர முதலமைச்சர். இரண்டாவது முறையாக நான் கண்ட தலைவர் ஜெயலலிதா.
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஜாதி மத பேதம் என்பதை தமிழகத்தில் இருந்து அழிப்பதற்கு, ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு, ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கு மீண்டும் வரும் ஆட்சி. இங்கு நீங்கள் சுதந்திரமாகப் பணியாற்றலாம் என்று எங்களை அரவணைத்து விஜய் கூறினார். உங்களைப் போன்ற இளைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உங்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக இருப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பணியாற்றினேனோ தவெக விஜயின் தலைமையில் என்னுடைய பணிகளை நான் நினைவில் கொள்வேன். நீங்கள் அசைந்தால் தமிழகம் அசையும். நீங்கள் நினைத்தால் தமிழக மக்களுக்கு பணியாற்ற முடியும். வருகின்றவருக்கு, நாட்டு மக்களுக்கு நான் இதுவரை என்ன செய்தேன் என்பது தெரியும்.
நாளை காணப் போகிற தலைவர், தமிழ்நாட்டை ஆளர் போகிற தலைவர் விஜய். விமானத்தில் வரும்போது கோளாறு ஏற்பட்டதால் பெங்களூரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கே 1 மணி நேரம் பணிகளை முடித்துவிட்டு மீண்டும் வரும்போது, எனக்காக சகோதர, சகோதரிகள் தாய்மார்கள், பெரியோர்கள் 5 மணி நேரமாக எனக்காக காத்திருக்கிறீர்கள் என்றால் உங்களை வெல்வதற்கு எந்த சக்தியாலும் முடியாது. விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
உங்கள் தலைவரை சந்திக்க முடியுமா என்றார்கள். எங்களுடன் வந்தவர்களுக்கு ஒன்னே கால் மணி நேரம் சால்வை போட்டு, அரவணைத்து வரலாறு படைத்த தலைவர்தான் உங்கள் தலைவர். நாளைய எதிர்காலத்தை நோக்கி நாம் பயணம் செய்யப் போகிறோம். நாளை எதிர்காலத்தை மட்டுமல்ல வரலாற்றைப் படைக்கப் போகிறோம். ஆண்ட ஆட்சிகளே ஆள வேண்டுமா. புதிய தலைமுறையை உருவாக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றுவதற்கு புதிய தலைமுறையினர் வேண்டும். திரைப்படத்தில் நடித்தால் ஏறத்தாழ ஆண்டு 500 கோடி ரூபாய் கிடைக்கும். தேவையில்லை என்று கூறி மக்கள் பணியாற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார். தூய்மையான ஆட்சி, மக்களாட்சி, தமிழகம் அமைதிப் பூங்காவாக காண்பதற்கு வருகிறார்.
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஜாதி மத பேதம் என்பதை தமிழகத்தில் இருந்து அழிப்பதற்கு, ஏழை மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு, ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கு மீண்டும் வரும் ஆட்சி. இங்கு நீங்கள் சுதந்திரமாகப் பணியாற்றலாம் என்று எங்களை அரவணைத்து விஜய் கூறினார். உங்களைப் போன்ற இளைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உங்களுக்கு நான் ஒரு வழிகாட்டியாக இருப்பேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பணியாற்றினேனோ தவெக விஜயின் தலைமையில் என்னுடைய பணிகளை நான் நினைவில் கொள்வேன். நீங்கள் அசைந்தால் தமிழகம் அசையும். நீங்கள் நினைத்தால் தமிழக மக்களுக்கு பணியாற்ற முடியும். வருகின்றவருக்கு, நாட்டு மக்களுக்கு நான் இதுவரை என்ன செய்தேன் என்பது தெரியும்.
பொதுச் செயலாளராக, முதலமைச்சராக முன்மொழிந்தேன். எனக்கு வந்த முதலமைச்சர் வாய்ப்பை எடப்பாடியை ஏற்றுக்கொள்ள சொன்னவன் நான். ஆனால், அங்கு மனிதநேயம், சமத்துவம் இல்லை. 50 ஆண்டுகால வரலாற்றில் நான் உழைத்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சாதாரண தொண்டனாகக் கூட இருக்கக் கூடாது என்று உறுப்பினர் பொறுப்பை பறித்தார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதிமுக எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். காலங்கள் கனிந்து வருகிறது என்று கூறினார்.
- Log in to post comments