புதுச்சேரி: தவெக தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது

விஜய் போடும் திட்டம்

புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் தவெக தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். அதாவது புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறக்கப்பட வேண்டாம் என்று விஜய் நினைக்கிறாராம். இதற்கு பின் சில காரணங்களும், விஜயின் சில யோசனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

புஸ்ஸி ஆனந்தின் சமீபத்திய செயல்பாடுகளிலும், அவரது அணுகுமுறைகளிலும் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தின் முக்கிய பொறுப்புகள் குறித்த பல புகார்களை விஜய் பெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புஸ்ஸி ஆனந்தின் சில செயல்கள் விஜயை கடுப்பாக்கி உள்ளதாம். இந்த அதிருப்திக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை அவர் கையாண்ட விதம். நிவாரணப் பணிகளை ஆனந்த் சரிவர ஒருங்கிணைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விஜய் திட்டம்:

இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சிக்குள் சீனியரான செங்கோட்டையன் வருகை புரிந்து உள்ளார். இவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கும் இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம். ஏற்கனவே அருண், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்போது செங்கோட்டையனும் வந்துள்ளதால் அவருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே வரும் நாட்களில் ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.

இதனால் புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரிக்கே திருப்பி அனுப்பும் திட்டத்தில் விஜய் இருக்கிறாராம். புஸ்ஸி ஆனந்தை புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று விஜய் யோசிக்கிறாராம். அங்கே புஸ்ஸி தலைமையில் தேர்தல் பணிகளை தீவிரமாக நடத்தி, அவரை அங்கே வெல்ல வைத்து முதல்வராக்கி விடலாம்.. தமிழ்நாட்டில் செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் அல்லது அதற்கு இணையான பதவியை கொடுக்கலாம் என்று விஜய ன் முக்கிய புள்ளிகளால் பேசப்பட்டு வருகிறதாம்.