இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?

இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?

நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு?
அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு, இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?
அதை ஒப்பீடு (Comparison) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி வந்த காசெல்லாம் என்ன தொழில் செய்து வந்தது? என்ன வேலை செய்து வந்தது? உண்மையிலேயே நீங்கள் உழைத்துச் சம்பாதித்த காசா? இல்லை, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு, ஆட்டையைப் போட்ட காசா? இதையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்க முடியுமா? இதையெல்லாம் நாம் கேட்டால், எல்லா ஊழல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து நம் மேல் சேற்றை வாரி வீசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால், நாம் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.