TVK Vijay

இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?

நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு, இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு? அதை ஒப்பீடு (Comparison) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி வந்த காசெல்லாம் என்ன தொழில் செய்து வந்தது? என்ன வேலை செய்து வந்தது? உண்மையிலேயே நீங்கள் உழைத்துச் சம்பாதித்த காசா? இல்லை, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு, ஆட்டையைப் போட்ட காசா? இதையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்க முடியுமா? இதையெல்லாம் நாம் கேட்டால், எல்லா ஊழல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து நம் மேல் சேற்றை வாரி வீசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால், நாம் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாக்களை நடத்துவது தான் உண்மையான மக்கள் அரசியல். தலைமை கூறிய அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிப்போம்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாக்களை நடத்துவது தான் உண்மையான மக்கள் அரசியல். தலைமை கூறிய அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிப்போம். கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சர்வே எடுக்க சென்ற த.வெ.க-வினரை தாக்கிய தி.மு.க.வினர்..

சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நேரலை.

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.

நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.

முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.