TVK live

தமிழக வெற்றிக் கழகம் சேலம் சீலநாயக்கன்பட்டி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன்

தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா நேரலை.

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.

நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம்.

முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.