த.வெ.க.வின் அடிநாத தத்துவமான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை வழி நின்று அன்பின் வெளிப்பாடாக நடைபெற்றது இஃப்தார் விருந்து.!
திருச்செங்கோட்டில் மத நல்லிணக்கத்தின் சங்கமம். த.வெ.க.வின் அடிநாத தத்துவமான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை வழி நின்று அன்பின் வெளிப்பாடாக நடைபெற்றது இஃப்தார் விருந்து.! திருச்செங்கோடு மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் ஏற்பாட்டில், பள்ளிவாசல் நிர்வாகிகள் MS முகமது மூசா ஆலிம், முகமது இசாக், ரசீன், முபாரக், ஹபீப் ஆகியோர் பங்கேற்க, குடும்பமாக இஃப்தார் விருந்தை கொண்டாடினோம்.! சிலர் வாக்கு அரசியலுக்காக நடத்தும் இஃப்தார் போல அல்லாமல் உரிமையோடு உறவாடி கூடி மகிழ்ந்தது மனதுக்கு நெருக்கமாக அமைந்தது.! இஸ்லாமிய முறைப்படி நாள் முழுவதும் நோன்பு கடைபிடித்து தொழுகை நடத்தி, அன்பை பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்வு, தமிழக வெற்றிக் கழகம் முன்னிறுத்தும் சமத்துவ அரசியலுக்கு சான்றாக அமைந்தது.! @tvkvijayHQ @TVKPartyHQ