மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது - TVK Thalaivar VIJAY
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை.
விஜய்க்கு அனுமதி மறுத்த பாண்டிச்சேரி காவல் துறை!!!
- Read more about விஜய்க்கு அனுமதி மறுத்த பாண்டிச்சேரி காவல் துறை!!!
- Log in to post comments
தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய்: நீங்கள் அசைந்தால் தமிழகம் அசையும் - சூளுரைத்த செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையம் வந்த மாநில தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு பொதுமக்கள், ஆதரவாளர்கள் மற்றும் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் மத்தியில் செங்கோட்டையன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முதலில் நான் கண்ட தலைவர் நம் இதயங்களில் குடிகொண்டிருக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மூன்று முறை தமிழ்நாட்டில் நிரந்தர முதலமைச்சர். இரண்டாவது முறையாக நான் கண்ட தலைவர் ஜெயலலிதா.
புதுச்சேரி: தவெக தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது
புதுச்சேரிக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் தவெக தீவிரமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம். அதாவது புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறக்கப்பட வேண்டாம் என்று விஜய் நினைக்கிறாராம். இதற்கு பின் சில காரணங்களும், விஜயின் சில யோசனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்தின் சமீபத்திய செயல்பாடுகளிலும், அவரது அணுகுமுறைகளிலும் விஜய் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தின் முக்கிய பொறுப்புகள் குறித்த பல புகார்களை விஜய் பெற்று வருவதாகவும், அவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண் வேண்டி தவெக வெற்றிக்காக வழிபாடு
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜயின் தவெக கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் மெக்காவில் இஸ்லாமிய பெண் வேண்டி வழிபாடு செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் மெக்காவில் புனித ஸ்தலத்தில் தமிழ் மொழியில் அந்த பெண் பேசுகிறார்.அவர், ‛‛உங்களிடம் பாதுகாவல் தேடுகிறோம் கேட்கிறோம் இறைவா. எங்கள் நாட்டை இருளில் இருந்து ஒளியின் பக்கம் திருப்புவாயாக இறைவா. நாங்கள் இம்மையிலும் நல்வாழ்வு கேட்கிறோம் இறைவா. எங்களை படைத்து பரிபாலிப்பவனே.. எங்களை சாங்கியோடு வாழ செய்வாயாக இறைவா..
மேயர் பிரியாவின் சூட்டிங் ஸ்பாட்
சென்னையில் மழைநீர் தேங்கவே இல்லை..! சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த மேயர் பிரியா..! மாற்றி மாற்றி பேசி மாட்டிக்கொண்டார்
- Read more about மேயர் பிரியாவின் சூட்டிங் ஸ்பாட்
- Log in to post comments
