07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

செய்திக் குறிப்பு எண்: 38 தேதி: 16.05.2026

லோக் பவன், தமிழ்நாடு - செய்திக் குறிப்பு

​10.05.2026 அன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம்:

  1. சி. ஜோசப் விஜய் (முதலமைச்சர்): பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, உள் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல்.
  2. என். ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர்): ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டம், ஊரகக் கடன் மற்றும் நீர்ப்பாசனம், சிறு பாசனம் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள்.
  3. ஆதவ் அர்ஜுனா (பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்): பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு.
  4. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் (சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்): சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.
  5. கே.ஏ. செங்கோட்டையன் (நிதித்துறை அமைச்சர்): நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் படிகள்.
  6. பி. வெங்கடரமணன் (உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்): உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு.
  7. ஆர். நிர்மல்குமார் (எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்): மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்.
  8. ராஜ்மோகன் (பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்): பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம், செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம், சினிமாடோகிராஃப் சட்டம், செய்தித் தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, அரசு அச்சகம்.
  9. டாக்டர் டி.கே. பிரபு (இயற்கை வளத்துறை அமைச்சர்): தாதுக்கள் மற்றும் சுரங்கங்கள்.
  10. செல்வி எஸ். கீர்த்தனா (தொழில் துறை அமைச்சர்): தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு.

லோக் பவன், சென்னை - 22. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்