அதாவது இன்னொரு திமுகவில் இருக்கிற இன்னொரு ஒரு மூத்த உறுப்பினர் அவர் பேசும்போது சொல்றாரு என்னன்னா அதாவது மக்கள் அவங்க கட்சிக்கு ஓட்டு போடாததுனால அந்த மக்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதாம்.
எனக்கு சத்தியமா புரியல....
அதாவது இத்தனை வருஷமா இந்த 50, 60 வருஷமா இதே மக்கள் தான் அவங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க.அந்த மக்களை பார்த்து எப்படி அந்த வாயில அந்த ஒரு வார்த்தை வருது என்னால நினைச்சு பார்க்கவே முடியல. அதான் மக்கள் தீர்ப்பை ஏத்துக்க முடியாத அந்த மனசு எப்ப இல்லையோ, இவங்க எல்லாம் ஏன் அரசியல்ல இருக்கணும்ன்ற அந்த கேள்விதானே வரும்?
மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்கணும்.... இது எல்லாத்தையும் விட, இது எல்லாத்தையும் விட கொடுமை என்ன தெரியுமா?
இந்த ஆபாச நதி, வன்ம நதி பேச்சுகளை இங்க பல வருஷமா, பல ஆண்டுகளா அரசியல் இருக்கிற பெரியவர்கள் எல்லாம் என்ன சொல்றாங்க தெரியுமா?
இதுல என்ன தப்பு இருக்கு? நாங்க அந்த காலத்துல பேசாத பேச்சா அப்படின்றாங்க.
அது அவங்களுக்கு தப்புன்னே தெரியல. ஐயா பெரியவர்களே, அந்த காலத்தில் இருக்கிற அரசியல் இருக்கிற நல்லது மட்டுமே எடுத்துப்போம்.
எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு?
நீங்க மெயின்டைன் எ பொலிட்டிகல் டீசன்சி அண்ட் டெக்கோரம் அட்லீஸ்ட் டு அன் எக்ஸ்டெண்ட்.
அதுக்கப்புறம் அவங்க இஷ்டம் அவங்க எடுத்துக்கணும்னா எடுத்துக்கிட்டோம் இல்லன்னா விட்டுட்டோம்.
ஐயா பெரியவர்களே எல்லாருக்கும்.
அந்த மிசாவ பத்தின ஹிஸ்டரிய பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியும், நடந்தது, நடக்கிறது, நடக்க போறது எல்லா மக்கள் பாத்துக்கிட்டு இருக்காங்க.
மக்களை விடவா நாம இவங்கள வந்து கமெண்ட் பண்ணிட போறோம்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் திமுக பத்தி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒன்னு சொன்னாரு.
பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை.