07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

கிருஷ்ணகிரியில் கடந்த 5 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பாதாள சாக்கடைப் பிரச்சினை: தமிழக வெற்றிக் கழகத்தினர் உடனடியாக தூர்வாரி தீர்வு!

கிருஷ்ணகிரியில் கடந்த 5 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பாதாள சாக்கடைப் பிரச்சினை: தமிழக வெற்றிக் கழகத்தினர் உடனடியாக தூர்வாரி தீர்வு!
கிருஷ்ணகிரி மாவட்ட நகர கழக செயலாளர் திரு. M. சசிகுமார், huபாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் போது பார்வையிட்டார்...
கிருஷ்ணகிரி மாவட்ட நகர கழக செயலாளர் திரு. M. சசிகுமார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரத்திற்குட்பட்ட பழையபேட்டை (பழைய பேருந்து நிலையம் பின்புறம்) மற்றும் வார்டு எண் 09-ல் உள்ள தர்மராஜா கோவில் அருகில் (தபால் நிலையம் எதிரில்) கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக பாதாள சாக்கடை தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்ததோடு, சுகாதாரச் சீர்கேடும் நிலவி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக களத்தில் இறங்கி இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

துரித நடவடிக்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜெ. ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின் படியும், கழக தலைமையின் அறிவுறுத்தலின் படியும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான அண்ணன் திரு. N. ஆனந்த் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA) மதிப்பிற்குரிய அண்ணன் திரு. P. முுகுந்தன் அவர்களின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகர கழக செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. M. சசிகுமார் அவர்கள் இன்று பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய நகர கழக செயலாளர் திரு. M. சசிகுமார், பாதாள சாக்கடை அடைப்பை உடனடியாக தூர்வாரி சரி செய்ய நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளின் துரிதப் பணியால் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த சாக்கடைப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

தங்கள் நீண்ட நாள் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றித் தந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.