07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பூந்தமல்லி வடபழனி வழிதட சேவையை தொடங்கி வைத்தார்கள் • தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேரலை • பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு • தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமான 'தாய்மாமன் சீர்' இன்று மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் • ஊழலை ஒழிக்க அதிரடி திட்டம்: • CM Vijay with his friend Racer...AK • புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு • யார் அந்த ரதீஷ்? • மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் •

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு!

பிரதமருடன் சந்திப்பு: டெல்லி சென்ற தமிழக முதல்வர் விஜய், முதலில் பாரத பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகம் சார்ந்த நான்கு முக்கிய கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் முன்வைத்தார். நிதி அமைச்சருடன் சந்திப்பு: பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். உள்துறை அமைச்சர் சந்திப்பு ரத்து: முன்னதாக, இன்றைய டெல்லி பயணத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் விஜய் சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அண்மைத் தகவலின்படி மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பு இன்று இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இந்த அடுத்தடுத்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுகிறது.