07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மெட்ரோ ரயில் சேவையை பூந்தமல்லி வடபழனி வழிதட சேவையை தொடங்கி வைத்தார்கள் • தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேரலை • பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு • தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமான 'தாய்மாமன் சீர்' இன்று மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார் • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் • ஊழலை ஒழிக்க அதிரடி திட்டம்: • CM Vijay with his friend Racer...AK • புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு • யார் அந்த ரதீஷ்? • மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் •

"விஜய் எனது தம்பி போன்றவர்; நேரில் வாழ்த்துரைக்கக் காத்திருக்கிறேன்" – பின்னணிப் பாடகி டி.கே. கலா பேட்டி!

"விஜய் எனது தம்பி போன்றவர்; நேரில் வாழ்த்துரைக்கக் காத்திருக்கிறேன்" – பின்னணிப் பாடகி டி.கே. கலா பேட்டி!
பின்னணிப் பாடகி டி.கே. கலா பேட்டி!

சென்னை:

"கில்லி", "குருவி" போன்ற திரைப்படங்களில் நடிகர் விஜய்யின் தாயாராக நடித்த பிரபல பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே. கலா, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நான் பின்னணி பாடகி டி.கே. கலா. விஜய் தம்பியுடன் 'கில்லி' மற்றும் 'குருவி' ஆகிய திரைப்படங்களில் அவருக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். எங்களுடையது மிக நீண்ட கால குடும்ப நட்பு. தம்பி விஜய் சிறு வயது முதலே எங்கள் பகுதியில்தான் வளர்ந்தார். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்திருப்பதைப் பார்த்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையே தலைமுறை கடந்த நட்பு உள்ளது. தம்பியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எனக்குத் தெரியும்; எங்களையும், என் தாயாரையும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தம்பி விஜய், மக்களுக்கு மிகவும் சீரான, நேர்மையான மற்றும் திறமையான ஆட்சியை வழங்கி வருகிறார். இதனை தமிழக மக்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். எனவே, அவருடன் நடித்த உரிமை மற்றும் குடும்ப நட்பின் அடிப்படையில், அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற ஆசையில் காலையிலிருந்து காத்திருக்கிறேன். இன்னும் அவரைச் சந்திக்க இயலவில்லை என்றாலும், விரைவில் சந்தித்து எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பேன் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்."

இவ்வாறு நடிகை டி.கே. கலா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.