இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு?

நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு, இன்று உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு? அதை ஒப்பீடு (Comparison) செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படி வந்த காசெல்லாம் என்ன தொழில் செய்து வந்தது? என்ன வேலை செய்து வந்தது? உண்மையிலேயே நீங்கள் உழைத்துச் சம்பாதித்த காசா? இல்லை, ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு, ஆட்டையைப் போட்ட காசா? இதையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்க முடியுமா? இதையெல்லாம் நாம் கேட்டால், எல்லா ஊழல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து நம் மேல் சேற்றை வாரி வீசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால், நாம் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

குட்டி ஸ்டோரி (காளை கதை): விஜய்

குட்டி ஸ்டோரி (காளை கதை): 

விஜய் ஒரு குட்டி கதை சொன்னார். ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க அனுபவம் உள்ள பலர் முயன்று தோற்றபோது, ஒரு "சின்னப் பையன்" (தவெக-வை குறிப்பிடுகிறார்) அந்த காளைக்கு பசி என்பதை உணர்ந்து புல் கட்டை காட்டி அன்பால் அடக்கினான். இதில் "காளை" என்பது தமிழக அரசியல் களம், "பெரியவர்" என்பது மக்கள், மற்றும் "சின்னப் பையன்" என்பது தவெக என்று விளக்கினார்.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமி­ழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் குரல் உயர்ந்தால்தான் ஆட்சி செயல்படும் என்பதற்கு இதுவே சாட்சி.

மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?… — TVK Vijay (@TVKVijayHQ) February 13, 2026

தமிழக வெற்றிக் கழகம் சேலம் சீலநாயக்கன்பட்டி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாக்களை நடத்துவது தான் உண்மையான மக்கள் அரசியல். தலைமை கூறிய அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிப்போம்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாக்களை நடத்துவது தான் உண்மையான மக்கள் அரசியல். தலைமை கூறிய அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிப்போம். கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.