இரண்டு மணிநேரம் கே.ஏ. செங்கோட்டையன் விஜயுடன் சந்திப்பு

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்று சந்திப்பு, காலையில் M.L.A பதவி ராஜினாமா செய்து மாலையில் சந்திப்பு.  இன்று  த.வெ.கவில் இணையும் கே.ஏ.

சபாநாயகரை சந்தித்த கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

1977 ஆண்டு முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவர்  ஆவார். ௧௯௭௭ ஆண்டிலிருந்து 9 முறை எம்.எல்.ஏ வாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு துறைகளான வருவாய் துறை, வேளாண்மை துறை,, வனத்துறை, போக்குவரத்து துறை,  தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.இ.அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக அவர் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆசனா தவெக வில் இணைந்தார்

முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆசனா தவெக வில் இணைந்தார் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆசனா தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இவர் 2010-களின் நடுப்பகுதியில் அதிமுகவில் சேருவதற்கு முன்பு, அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2021 ஆம் ஆண்டு காரைக்கால் (தெற்கு) தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார், ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.  2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.