சென்னை:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) சார்பில் 300 பேருந்துகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (ஜூன் 25) தொடங்கி வைக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காகவும் இந்த பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.