07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

இது உலக அதிசயத்தின் வரலாறு! வேற எவருக்கும் கிட்டாத ஒரு வரலாறு - கு.பா கிருஷ்ணன் முதல்வர் விஜய்க்கு புகழாரம்

இது உலக அதிசயத்தின் வரலாறு! வேற எவருக்கும் கிட்டாத ஒரு வரலாறு - கு.பா கிருஷ்ணன் முதல்வர் விஜய்க்கு புகழாரம்

மலைக்கோட்டையை நம் நெஞ்சில் சுமந்திருக்கும் திருச்சிக்கு வருகை தரக்கூடிய சிரன்கோட்டையினுடைய தளபதியே உங்களுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள். கலை உலகத்திலே நாங்கள் கண்டோம் களிப்புற்றோம், தமிழகத்தினுடைய வெற்றி கழகத்தின் தலைவராக இருந்தோம், வாழ்த்து பாடினோம். ஆனால், ஆனால் தமிழகத்துடைய முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் விரும்புகின்ற முதல்வராக பொறுப்பேற்று வந்திருக்கிறீர்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, சரித்திரத்தையே சாகடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். 90 ஆண்டு காலம் வாழ்ந்த அரசியல் கட்சிகளிடம் உண்டு, வைரவிழா கண்ட அரசியல் கட்சிகளும் உண்டு, வெள்ளி விழா கண்ட அரசியல் கட்சிகளும் உண்டு. எப்படி ஐயா உங்களுக்கு இப்படி ஒரு துணிவு வந்தது? இரண்டரை ஆண்டு காலத்திலே ஒரு கட்சியை நடத்தி, ஆட்சியை பொறுப்பேற்றிருக்கிறீர் என்று சொன்னால், இது உலக அதிசயத்தின் வரலாறு! வேற எவருக்கும் கிட்டாத ஒரு வரலாறு. இந்த வரலாற்று நாயகரே, 'எங்களுக்கெல்லாம் ஒரு வழியை காட்டுகிறோம்' என்று எங்களெல்லாம் பெருமைப்படுத்தினீர்கள். இப்பொழுது நாங்க கால்ல நிக்கவே முடியல. ஏன்னா, 90 வயதை தாண்டிய கட்சிக்காரர் வருகிறார்கள், 75 வருடங்களை கொண்ட கட்சிக்காரர் வருகிறார்கள், 50 ஆண்டு கால வெள்ளிவிழா கட்சியை கண்டவர்களும் வருகிறார்கள், இன்று பிறந்தவர்களும் வருகிறார்கள். இவ்வளவு எதிரிகளை எல்லாம் நீங்கள் வசப்படுத்தக்கூடிய அந்த கவர்ச்சி உங்களிடத்திலே எப்படி வந்தது? அந்த ஈர்ப்பு எப்படி வந்தது? ஓட்டு போட வருகிறார்கள்; 60 ஆயிரம் வயர்களுக்கு அப்பாலே வெள்ளையன் காலத்திலே வாழ்ந்தவர்கள் இன்றைக்கு உங்களுக்கு ஓட்டு போட திருச்சிக்கு, தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அரபு நாட்டிலே இருந்தவர்கள் வந்தார்கள், ஏழு நாட்டிலே இருந்தவர் வந்து ஓட்டு போட்டார்கள். இப்படிப்பட்ட இந்த கவர்ச்சியை கண்டு நாளெல்லாம் வியக்கிறேன். உங்களிடத்திலே வந்த பொழுது என்னை என்ன சொன்னார்கள் தெரியுமா? 'பிழைக்க தெரியாதவன், அரசியல் கட்சியை தேர்வு செய்ய முடியாதவன்' என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு நான் பார்க்கிறேன், உங்கள் தொலைநோக்குச் சிந்தனையினாலே நாடு வந்ததால் இன்றைக்கு வாழ்வுற்று நிற்கிறேன். பலர் வதக்கிக் கொண்டிருக்கிறார்கள், எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்—எப்படி ஐயா இந்த கட்சி வந்தது ஆட்சிக்கு என்கிறார்கள். இதை ஆராய்ச்சி செய்வதற்கே உலக நாடுகளே ஒன்று கூடி, பல்வேறு பல்கலைக்கழகத்திலே ஆட்சி ஆய்வு செய்வதற்கு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட திறம் வாய்ந்த தலைவர் அவர்களே! வாழுங்கள் பன்னெடுங்காலம்! வளருங்கள் புகழோடு தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக! நீங்கள் எடுக்கக்கூடிய வாளுக்கு நாங்கள் துணை இருப்போம். முதல் முறையாக வந்தீர்கள், உங்களுக்கு வால் கொடுத்தோம். இன்றைக்கு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறீர்கள்; உங்களுக்கு செங்கோல் தருகிறோம். இந்த செங்கோல் வளையாமல் எங்கள் திருச்சிபுரத்தின் மண்ணிற்கு மகிமை சேர்க்கின்ற வகையிலே வந்திருக்கிறீர்கள். வருக வருக வருக வருக!"