07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

மாற்றி மாற்றி ஏமாற்றிய இருதரப்பையும் மக்கள் ஒதுக்கிவிட்டனர்: திருச்சியில் விஜய் உருக்கம்!

மாற்றி மாற்றி ஏமாற்றிய இருதரப்பையும் மக்கள் ஒதுக்கிவிட்டனர்: திருச்சியில் விஜய் உருக்கம்!

தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், தன்னை ஆதரித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு தனது "ஸ்பெஷல்" வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கினார்.

​அவர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

திருச்சி எனது இதயத்திற்கு நெருக்கமானது

​"தமிழ்நாட்டிற்கு திருச்சி எப்படி ஒரு இதயம் போன்றதோ, அதேபோல் எனது இதயத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மிகவும் நெருக்கமானவர்கள் (குளோஸ்தான்). அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று விஜய் உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார்.

ஆட்சிக்கு வந்தவர்களின் தற்போதைய நிலை

​தற்போதைய ஆளுங்கட்சியைச் சாடிப் பேசிய அவர்,

  • ​ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.
  • ​"ஆறு மாதம் அமைதியாக இருப்போம்" என்று சொன்னவர்களால், ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்தில்கூட அமைதியாக இருக்க முடியவில்லை.
  • ​ஒரு கல்யாண வீட்டிற்குச் சென்றால்கூட மக்கள் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். நான் முன்பு சொன்னதெல்லாம் இப்போது ஒவ்வொன்றாக நடந்து வருகிறது எனப் பேசினார்.

மக்களின் முதல் சேவகன்

​இத்தனை வருடங்களாக மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த இரண்டு தரப்பையும் மக்கள் வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கிவிட்டதாகக் குறிப்பிட்ட விஜய், உங்களுக்காக உண்மையாக உழைக்க வந்த உங்கள் விஜய் என்று தன்னை முன்னிலைப்படுத்தினார்.

​"உங்க அண்ணனை, உங்க தம்பியை முதலமைச்சராக இல்லாமல், உங்களின் முதல் சேவகனாக ஆக்கியிருக்கிறீர்கள்" என்று கூறி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும், தனக்கு ஆதரவளித்த அனைத்து இயக்கங்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் தலைவணங்கி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.