திருவொற்றியூர்:
சட்டமன்ற உறுப்பினர் என். செந்தில் குமார் தலைமையில், மாவட்ட இணை செயலாளர் ஏ. ஆனந்த், மாவட்ட பொருளாளர் எஸ்.ஜி. சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் விஎம். மாரி ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் மீது தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கடுமையாக அவதூறாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவொற்றியூர் தொகுதி சார்பில் தேரடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகி வாணி, 21-வது வட்ட மாமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ராஜேஷ் சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வி லோகேஷ், கே.பி. கிஷோர் குமார், ஜீவா, மணலி சாரதி, பிரகாஷ், கார்த்திகேயன், வெற்றி, வெங்கட் உள்ளிட்ட திருவொற்றியூர் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.