07 Aug 2026 | 1:11 am | Chennai 25°C
Breaking
CM Vijay with his friend Racer...AK புதிய தலைமைச் செயலகம் எங்கே? அதிரடி அறிவிப்பு யார் அந்த ரதீஷ்? மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - CM விஜய் பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை எதுக்கு இந்த அவதூரா அசிங்கமா பேசுற அரசியல், துரு புடிச்சு போன, தேஞ்சு போன அவதூரா அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு? சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய் விவசாயி பக்கம் தான் நிற்பார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அறிவித்தார் 40,245 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு: த.வெ.க. அரசு அதிரடி அறிவிப்பு! முழு விவரம் தமிழக முதல்வர் விஜய் – கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 31வது தென்னிந்திய மண்டல கவுன்சில் சந்திப்பு

முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை

முதலமைச்சர் விஜய் காவிரி விவகாரத்தில் சொன்ன முக்கிய அறிக்கை

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 7, 2026 அன்று காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முக்கியமான பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சர்,

“காவிரி நம்முடைய உயிர் ஆதாரம். அது உணர்வு ரீதியான பிரச்சினை. அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இந்த அரசுக்கு துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை.”

என்று தெரிவித்தார்.

1969-ல் சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களைச் சுட்டிக்காட்டி, அப்போது யார் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார், ஏன் அணைகள் கட்ட அனுமதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்ப விரும்பவில்லை என்று கூறினார்.

“அப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. அது எங்கள் நோக்கமும் இல்லை.”

என அவர் வலியுறுத்தினார்.மேலும், கர்நாடக முதலமைச்சருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தான் முன்வந்ததாகவும், அதனால் அவமானம் ஏற்பட்டாலும் தமிழக மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

“எதிரி நாடுகள்கூட பேசி பிரச்சினைகளைத் தீர்க்கின்றன. அண்டை மாநிலத்துடன் பேசுவதில் தவறில்லை”

என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழகத்தின் காவிரி உரிமை மற்றும் மேகதாது அணைக்கு எதிரான போராட்டத்தில் எந்த அளவுக்கும் சமரசம் இல்லை என்றும், சட்டப்போராட்டம் தொடரும் என்றும் உறுதியளித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என்றும், ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த அறிக்கை சட்டசபையில் பெரும் கவனத்தை ஈர்த்தது